"ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி".. தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி திறப்பு..!
தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" என்ற சாதனை மலரையும் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு மலர் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். அதேபோல், "புதுமைப் பெண்" திட்டத்தின் கீழ் உயர்கல்வி உதவித் தொகையும், நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருப்போருக்கு திராவிட மாடல் குறித்து தெரியாதது பற்றி தனக்கு கவலையில்லை என்றார்.
Comments